முதியோர்களுக்கு ஏற்படும் பொலிபார்மசி பாதிப்பிற்கான

எம்முடைய இல்லங்களில் வசித்து வரும் மூத்த உறுப்பினர்கள் நாளாந்தம் அவர்களுடைய ஆரோக்கியத்தை-  முதுமையின் ஆரோக்கியத்தை- பராமரிப்பதற்காக மருந்தியல் சிகிச்சையை மாத்திரை வடிவில் மேற்கொண்டு வருவர்.
இதில் சிலர் நாளாந்தம் வெவ்வேறு வகையான உடலியல் பாதிப்புகளுக்காக ஐந்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளை பாவிப்பர். இத்தகைய ஐந்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளை நாளாந்தம் பாவிப்பவர்களுக்கு வைத்தியர்கள் பொலிபார்மசி எனும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கிறார்கள்.
நீரிழிவு ,குருதி அழுத்தம்,  இதயம்..  சிறுநீரகம் …வயிறு… தொடர்பான பாதிப்புகள் என உடலில் ஏற்பட்டிருக்கும் பல நாட்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரண சிகிச்சையாக மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவர்.
இன்றைய சூழலில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் முதியோர்களில் மூன்றில் ஒருவர் இத்தகைய பொலிபார்மசி பாதிப்பை எதிர்கொண்டு வருகிறார்கள்.South Asians & Diaspora
இவர்கள் ஒவ்வொரு முறையும் தங்களுக்கு ஏற்படும் சிறிய அளவிலான அறிகுறி மாற்றங்களை வைத்தியர்களிடம் தெரிவித்து, எடுத்துக் கொண்டிருக்கும் மாத்திரைகளின் பட்டியலையும், நாட்பட்ட பாதிப்பிற்கான சிகிச்சை மேற்கொண்ட வரலாற்றையும் தெரிவிக்க வேண்டும்.
இதனை துல்லியமாக அவதானிக்கும் வைத்தியர்கள் நீங்கள் நாட்பட்ட பாதிப்பிற்காக மேற்கொண்டு வரும் மாத்திரைகளின் பின் விளைவுகளான பொலிபார்மசி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா..!  என்பதை அவதானித்து, அதாவது அட்வர்ஸ் டிரக் எஃபெக்ட்ஸ் எனும் பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா..! என்பதை துல்லியமாக அவதானித்து , அதற்குரிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை அவர் வழங்குவார்.
நினைவு திறன் பாதிப்பு, பகல் நேர சோர்வு, மயக்கம், குழப்பம்,  உறக்கமின்மை, சமநிலையை பராமரிப்பதில் தடுமாற்றம், நடக்கும் போது தடுமாறி கீழே விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். முதிய வயதில் இயல்பாக ஏற்படும் நீர் சத்து குறைபாடு அதிகரித்தும், கொழுப்புச் சத்து இயல்பான அளவில் இருந்து கூடுதலாக மேம்பட்டும் பாதிப்பை அதிகமாக்கும். ஆனால் இதற்கு எதிராக இவர்கள் மேற்கொள்ளும் மாத்திரைகளின் ஆற்றல் இருப்பதால் இவர்கள் பொலி பார்மசி எனும் பாதிப்பிற்கு முகம் கொடுக்கிறார்கள்.
இவர்கள் வைத்தியர்களை அணுகி குறிப்பாக முதியோர்களுக்கான பிரத்யேக வைத்திய சிகிச்சை நிபுணர்களை அணுகி அவர்களின் பரிந்துரையின் பெயரில் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தையும், மருந்தியல் சிகிச்சையையும் மேற்கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை முதுமை காலத்தில் மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *