சுவையான சிக்கன் வறுவல்

ஒரு கிலோ சிக்கன்
இரண்டு பெரிய வெங்காயம்
15அரைத்த சிறிய வெங்காயம்
மூன்று தக்காளி
இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்
ஒன்றரை ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவுகிரேவிக்கு பட்டை
சோம்பு
பிரிஞ்சி இலை
சிறிதளவுகருவேப்பிலை
தாளிக்க தேவையான அளவு எண்ணெய்
தேவையானஅளவு உப்பு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை சோம்பு, பிரிஞ்சி இலை கருவேப்பிலை சேர்க்கவும் பிறகு அரைத்த வெங்காயம் நறுக்கிய வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து சிக்கன் மசாலா மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டுக் கொண்டிருந்தால் ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அரை மணி நேரத்தில் சிக்கன் வறுவல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *