சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் நல்லதா? கெட்டதா? மருத்துவர் விளக்கம்

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுகர் நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி போடும் நிலை ஏன் வருகிறது??? இன்சுலின் ஊசி நல்லதா??? கெட்டதா???
ஒரு நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்தால் இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளங்க முடியும்.
நீரிழிவு என்பது நோய் என்ற நிலையில் இருந்து அது ஒரு பன்முக காரணிகள் கொண்ட குறைபாடு என்ற நிலையில் வைத்துப்பார்க்கப்படுகிறது.
it’s a deficiency. அதாவது நம் உடல் ஊட்டச்சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையில் ஏற்படும் குளறுபடி அல்லது குறைபாட்டை நாம் பொதுப்பெயராக “நீரிழிவு” என்று அழைக்கிறோம் .
Diabetes is a complex disorder with which our body becomes deficient in handling nutrients from food in a right way.
ஒரு நார்மல் மனிதன் அவன் உண்ணும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் இருந்தால் அது ரத்தத்தில் க்ளூகோசை கலக்கும்.
ரத்தத்தில் இருக்கும் க்ளூகோசை கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் உணரும். உணர்ந்த அடுத்த சில நாழிகைகளில் “இன்சுலினை” ரத்தத்தில் கலக்கும்.
இன்சுலினின் வேலை க்ளூகோசை உடலில் இருக்கும் செல்கள் அனைத்திற்கும் சென்று பசித்திருக்கும் சேய்களுக்கு அன்னை உணவு புகட்டுவது போல பசித்திருக்கும் செல்களுக்கு உணவு ஊட்டும்.
மிஞ்சிய உணவை ( க்ளூகோசை) கல்லீரலில் க்ளைகோஜெனாகவும் (Glycogen )தோலுக்கு அடியே ட்ரைகிளிசரைட்  (Triglyceride) எனும் கொழுப்பாகவும் சேமிக்க உதவும்.
இது பஞ்ச காலத்தில் ஏற்படும் பட்டினிகளின் போது உதவும் என்பதற்காக நமது உடலின் ஏற்பாடு. நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு (Fat) மற்றும் புரதம் (protein) போன்றவை ரத்தத்தில் கலக்கும் போது முறையே ஃபேட்டி அமிலங்களாகவும் அமினோ அமிலங்களாகவும் மாறும். அப்போதும் இன்சுலின் சுரக்கும்.
அமிலங்களையும் அமினோ அமிலங்களையும் நமது உடலின் கட்டுமானப்பணிகளுக்கு உபயோகிக்கும் முக்கிய வேலை இன்சுலினுடையது.
அதனால் அதை “கட்டுமான மீளுருவாக்க ஹார்மோன்” என்று அழைக்கிறோம்.
Anabolic harmone. மேலும் நமது உடலில் புரதத்தை சேமித்து வைத்திருக்கும் தசைகளும், கொழுப்பும் கரையாமல் இருக்க இன்சுலின் அவசியமாகிறது.
இன்சுலின் கொழுப்பு கரைவதை தடுக்கிறது. இதில் இருந்து நமக்கு புரிந்திருக்கும் “இன்சுலின்” என்பது நமக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான ஹார்மோன் என்று.
இந்த ஹார்மோன் பிறப்பில் இருந்தே சிலருக்கு முற்றிலுமாக அல்லது போதுமான அளவு சுரக்காது. இவர்கள் டைப் ஒன்று நீரிழிவு (TYPE I) உள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சுத்தமாக இல்லாததால் நாம் கட்டாயம் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் யார் கூறினாலும் இன்சுலின் ஊசியை டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள் நிறுத்திவிடக் கூடாது.
அவ்வாறு நிறுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அபாயகரமான நிலைக்கு ஏறிவிடும். மேலும் இன்சுலின் இல்லாததால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தில் கீடோன்கள் ஏறிவிடும்.
நமது செல்களுக்கு க்ளூகோசை ஊட்டவும் இன்சுலின் இல்லை. புதிதாக உருவாகும் கீடோன்களை சாப்பிட்டும் பழக்கமில்லை. ஆதலால் ஒரே சமயத்தில் க்ளூகோசும் கீடோன்களும் அபாய அளவை தாண்டி கோமா நிலைக்கு அழைத்துச்செல்லும். இதை Diabetic Ketoacidotic coma என்கிறோம்.
பல நேரங்களில் மரணம் சம்பவிக்கும் .எனவே டைப் ஒன்று நீரிழிவு நோயாளிக்கு கட்டாயம் இன்சுலினை மறுக்கக் கூடாது.
இப்போது பெரும்பான்மையான டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கதைக்கு வருவோம்.
டைப் டூ நீரிழிவு எப்படி வருகிறது ?
பொதுவாக முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட காலத்தில் தான் அதிகபட்சமான டைப் டூ நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகின்றன.
எனவே என்னைப் பொறுத்த வரை நான் டைப் டூ நீரிழிவை “இயந்திர தேய்மான நோயாகவே பார்க்கிறேன்”. நமது உடல் ஒரு இயந்திரம் என்றால் அது இயங்க தேவையான எரிபொருளை விடுத்து வேறொரு எரிபொருளில் இயக்குவதால் ஏற்படும் தேய்மானம் தான் நீரிழிவு நோய் என்பது எனது கருத்து.
மருத்துவ விஞ்ஞானம் டைப் டூ டயாபடிஸ்க்கு முதல் காரணமாக “ஜீன்கள்” எனும் பிறவிக்குறைபாட்டை குறிக்கிறது.
அடுத்த காரணங்களாக அதிக கலோரி உணவு , அதிக உடல் எடை , குறைந்த உடல் பயிற்சி, அதீத மன அழுத்தம் / உளைச்சல் போன்றவற்றை கூறுகிறது.
நிச்சயம் ஜீன்களின் தாக்கத்தை மறுப்பதற்கில்லை. நம்மால் பெரிதாக மாற்ற இயலாத ஒரு காரணியாக ஜீன்கள் இருக்கின்றன.
இதை Non modifiable risk factor ஆனால் நம்மால் மாற்ற முடிந்த Modifiable risk factorகளில் முதன்மையாக நான் கருதுவது “உணவு” டைப் டூ நீரிழிவு நோயாளிக்கு ஏன் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாகின்றன?
1. அவரது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சரிவர ரத்த க்ளூகோஸ் அளவுகளை கிரகிக்க முடியாமல் போவது. இதனால் உணவு சாப்பிட்டபின் ஏறும் சர்க்கரைக்கு ஏற்றாற் போல் இன்சுலின் சுரப்பு இருக்காது.
2. நமது உடலில் உள்ள அத்தனை செல்களிலும் இன்சுலினை இணங்கண்டு கொள்ள ஏதுவாக Insulin receptor கள் இருக்கும். இவற்றின் அளவுகள் செயல்களில் குறைவதால் கணையத்தால் சுரக்கப்பட்ட இன்சுலின் செல்களில் சரியாக வேலை செய்யாது இதை Insulin resistance என்போம். எனவே ஒரு சமயத்தில் இன்சுலினும் குறைவாக சுரந்து , சுரக்கப்பட்ட கொஞ்சூண்டு இன்சுலினும் சரியாக வேலை செய்யாமல் போவதால் ஏற்படுவதே டைப் டூ டயாபடிஸ்.
இப்போது இன்சுலின் ஊசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *