இன்று இருந்தவன் நாளை இல்லை

“மலைகள் உயரும்  சிகரம் கவிழும்
விதைகள் முளைக்கும் பூக்கள் வாடும்
இன்று இருந்தவன் நாளை இல்லை
காலம் காட்டும் உண்மை இதுவே!”
“மழை பெய்யுது மண்ணை அரிக்குது
பனி பொழியுது உயிர்களை முடக்குது
வெயில் அடிக்குது நிலத்தை உலர்த்துது
பருவம் செதுக்கும் செயல் இவையே!”
“ஆறுகள் பாயும் ஓட்டம் வேறுவேறே
சிற்றலை மோதும் வடிவம் பலபலவே
காற்று வானம் எல்லாம் மாறுமே
மாற்ற மொன்றே மாறாதது என்றுமே!
“உயிர்களையும்  நேசித்து நம்பியவர்களையும்  நேசிப்போம்!
துயரங்களையும் போக்கி எல்லோரையும் மகிழ்விப்போம்
அயலவர் அவலங்களை துடைத்து எறிவோம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *