இது எதிர்கட்சி சதி!.. எங்க ஓட்டு விஜய்க்குதான்!..

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறியிருக்கும் நிலையில் அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு பெறுவது என்பது பலரின் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்வுதான். ஆனால் விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதல்தான் நான் விவாகரத்து பெறுகிறேன் என சங்கீதா சொல்லி இருப்பதுதான் இப்போது பிரச்சினை
..
கடந்த பல வருடங்களாகவே விஜய் நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார்.. நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.. என்னை கொடுமைப்படுத்தினார்.. என்னை சுதந்திரமாக செயல்பட விடவில்லை.. பொருளாதார ரீதியாக என்னை முடக்கப் பார்த்தார்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்தான் இப்போது நீதிமன்றத்தை அணுகியிருக்கிறேன்.. என சொல்லி அதிர்வல்களை ஏற்படுத்தியிருக்கிறார் சங்கீதா..
மேலும், நடிகையுடன் என் கணவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார்.. அது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.. அதை என் கணவரும் அனுமதித்தார்.. தேவைப்படும் நேரத்தில் நடிகையின் பெயரை வெளியே சொல்வேன்.. தேவைப்பட்டால் நடிகை மீது  வழக்கு தொடர்வேன் என கூறி அதிர வைத்திருக்கிறார் சங்கீதா.
இதை தொடர்ந்து இந்த புகாரால் விஜயின் அரசியல் இமேஜ் பாதிக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.. ஏனெனில் பெண்களின் ஓட்டுக்களை விஜய் வாங்குவாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது..
ஏனெனில், திமுக, அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்து விஜயை சமூக வலைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் விஜயின் தீவிர ரசிகர்களும் விசுவாசிகளும் இதை நம்பவில்லை. கரூர் விஷயத்தை வைத்து எங்கள் தலைவரையும் முடக்க பார்த்தார்கள்.. பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதித்து முடக்க பார்த்தார்கள்.. சிபிஐ விசாரணையை வைத்து மிரட்டினார்கள்.. ஜனநாயகனை ரிலீஸ் செய்யவிடாமல் மிரட்டி பார்த்தார்கள்..இப்போது விவாகரத்து வழக்கு பின்னணியிலும் அரசியல் சதி இருக்கிறது.. என்ன நடந்தாலும் எங்கள் ஓட்டு விஜய்க்குதான் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *